அலையென ஆர்ப்பரிக்கும்
மனங்களின் மத்தியில்
மௌனங்களின் நிசப்தத்தால்
மயான அமைதி!
சோகங்களின் மிகுதியால்
சுருண்டுவிட்ட இதயங்களின்
நம்பிக்கைக் கீற்றாக
உதட்டில்மட்டும் புன்னகைக்கோடு!
சரவெடிச் சிரிப்புக்கள்
வானைப் பிளக்க
சத்தமின்றிக் கசிகிறது
இரத்தக்கண்ணீர்!
சந்தோசக் களிப்பில்
ஊர்கள் மிதக்க
சத்தியம் தப்பிய
சாவுகள் நிரம்பிவழிகிறது!
முரண்நிலை
ReplyDeleteவரிகளின் நுணுக்கமான கையாடல்
அற்புதமான சிந்தனை
அருமை
முரண்நிலை
ReplyDeleteசிந்தனைகளின் எதிர்நிலை
வாசிக்கதுண்டுது மனநிலை
உண்மையின் உணர்நிலை
கவிவரிக்கோர் புதுநிலை