Saturday, April 10, 2010


பெண் என்றால் ......

என் முன்னாலேயே
இன்னொரு பெண்ணை
சப்பை பிகருடா என்று
சலிச்சு கொண்டவன்
என் போட்டோ ஒன்றுக்கு
fb யில் பால்ய நண்பன்
ஏதோ எழுதி இருந்ததை
பார்த்து எரிந்து விழுகிறான்
நான் தனக்கு மட்டுமே தானாம்..


நெற்றிக்கு குங்குமம்
காலுக்கு மெட்டி
கழுத்துக்கு தாலி
என்று சம்பிரதாயங்களில்
வேலி போட்டு
பாதுகாத்து கொள்கிறார்கள்
மனைவியை
மனசு இருப்பதை
அறியாத மனிதர்கள்

4 comments:

  1. //என் போட்டோ ஒன்றுக்கு
    fb யில் பால்ய நண்பன்
    ஏதோ எழுதி இருந்ததை
    பார்த்து எரிந்து விழுகிறான்//

    nice :)
    actually, your lines suits for lovers too..

    ReplyDelete
  2. you are right Ananthi.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  3. you are correct Ananthi, keep it up!

    ReplyDelete
  4. thanx for ur comments varmajini

    ReplyDelete