Sunday, September 05, 2010

வாழ்த்துக்கள்

என் அருகில் நீ...
சொல்லேன்டா என
என் மனமும்
சொல்லிவிடுடா
என உன் கண்களும்
சண்டை போட்டுக்கொள்ள
ஏதோ தடுத்தது

எத்தனை தடவை
எத்தனை விதமாய்
ஒத்திகை பார்த்தேன்
எப்படி என் அத்தனை
துணிவையும் கொள்ளை
கொண்டாய்
உன் ஒற்றை பார்வையால்

சொல்லாத காதல்
இதயத்தை நொறுக்க
சோககீதங்கள்
நெஞ்சிற்குள் ஒலிக்க
வந்திருக்கிறேன்
இன்று நான்
மணவாழ்த்துக்கள் கூற
உன்னிடத்தில்.

1 comment:

  1. சொல்லாத காதல் இதயத்தை நொறுக்க ....இதை விட உயர்வானது உங்களுக்காக காத்திருக்கும்
    ,நம்பிக்கையோடு வாழுங்கள்.

    ReplyDelete