வேட்டையாடி,
விலங்கு வளர்த்து,
வேளாண்மை செய்தார் - அப்போது
அவர்களுக்கு ஊரும் இல்லை - அங்கு
கோயிலும் இல்லை
இனங்கள் பெருகின
போட்டிகள் தோன்றின
தன்னை விஞ்சிய
அனைத்தையும் வணங்கினர்
விதிமுறை வகுத்தனர்
எல்லைகள் குறித்தனர்
தேவைக்கேற்பவே
கண்டுபிடிப்புத் தொடர்ந்தது
சாதிகள் வளர்ந்தது
சமயங்கள் பெருகின
சமூக ஒழுங்கிற்காய்
சாத்திர விதிகள்
சாத்வீக வாழ்வுக்காய்
சத்திய போதனைகள்
மறந்தான் மனிதன்
மானுடத்தை
மனிதத்தை
ஆன்மாவின் நேயத்தை
இழந்தான் வாழ்வின்
இன்பத்தை
அமைதியை - தன்
இருப்பைக்கூட
வலியன் கூறுவதே
வேதம் ஆனது
எழியவர் என்றுமே
அடிமைகள் ஆயினர்
கடவுளைப் படைத்தான் - ஆனால்
கருணையை மறந்தான்
தானங்கள் கொடுத்தான் - ஆனால்
ஏழையை மறந்தான்
சாத்திரம் சடங்கை
மாற்றினான் தன் வசதிக்காக
மாற்ற மறுக்கிறான் - சில
மூட நம்பிக்கைகளை மட்டும்
//வலியன் கூறுவதே
ReplyDeleteவேதம் ஆனது
எழியவர் என்றுமே
அடிமைகள் ஆயினர்//
சரியாக சொன்னீர்கள்... மக்கள் சிந்திக்க வேண்டும்.........