Tuesday, August 04, 2009

சிலவேளை...

சிலவேளை நான் சுவாசிக்கலாம் - நாளை
உன் பிரசன்னத்தின் சுகந்தத்தை
சிலவேளை நான் உனது கைகளுடன் - நாளை
எனது கைகளையும் கோர்த்து நடக்கலாம்
சிலவேளை நான் மகிழ்ச்சியில் - நாளை
சிரிக்கலாம், ஏன் அழவும்கூடும் - ஆனந்தத்தில்

சிலவேளை தனிமையின் துணையுடன்
மௌனத்தில் கரையும் என் பொழுதுகள் - சோகத்தில்

பலவேளைகளில்..
சிலவேளை...........இருந்திருந்தால் என்றெண்ணி
நானே மௌனமாகிவிடுகிறேன்

1 comment:

  1. சந்தோசவேளை

    சில காலம், சில வேளை
    சுவாசத்தின் ஸ்பரிசம் இல்லாத போது
    அரவணைப்பின் நிம்மதியான தூக்கம் இல்லாத போது
    உன் வரவின் எதிர்பார்ப்பு மிகுந்திருந்த போது
    பலவாறிருந்தது - சிந்தனை
    ஆனால்
    உன் ஸ்பரிசமும் அரவணைப்பும் மீண்டும் கிடைத்தபோது
    சிந்தித்தவற்றையென்னி சிரித்து மனம.
    களைப்பில், அமைதியாக தூங்கிய உன் மார்பில் படுத்தபோது
    ஆனந்தத்தில் ஓரு துளி கண்ணீர்
    நீண்ட காலம் தூக்கம் கலைந்த மனம்
    இன்று உனது குறட்டை ஒலியின் சங்கீதத்தில்
    தூங்கியது - என்றுமில்லாத அமைதியின் பூரிப்பில்!

    ReplyDelete