Thursday, August 20, 2009

புரியாத புதிர்

இரு தசாப்பதங்களுக்கு மேலாக
படிக்க முனைந்து
விளங்கிக் கொள்ளமுடியாமல்
நான் தோற்றுப் போன
ஒரு கடினமான அத்தியாயம்
இருப்புக்கள் தொலைந்து
இழிநிலை வரினும்அ
வள் மௌனம் கலைவது இல்லை.
கொடுந்துயர் வந்து
குடும்பமே கலங்கினாலும்
அவள் நிதானம் இழந்தது இல்லை
இப்போதும் கூட எனக்கு
அவள் ஒரு புரியாத புதிர் தான

1 comment:

  1. காலம் விதித்த கடின வாழ்க்கை
    விரும்பாமலேயே சகித்த துன்பங்கள், வேதனைகள்
    பாதிப்பின் எதிர்வினை - கலைந்து மென்மையை
    கொடுத்தது - தற்துணிவை
    சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு - மௌனம்
    துன்பத்தின் அனுபவ வெளிப்பாடு - நிதானம்
    புதிர் அவிழ்ந்ததா?

    - குறும்புக்குண்டன் -

    ReplyDelete