Saturday, September 26, 2009

கலையாத கனவுகள்


எண்ணச் சுழற்சியில்
சிக்கிக் கிடக்கிறது
இறந்தகாலத்தில் எழுந்தவினாக்கள்!

இன்னும் கோர்த்துமுடியவில்லை
தொண்டைக்குழிவரை
எம்பிக்குதிக்கும்
நிகழ்காலத்தின் வியாக்கியானங்கள்!

வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமிடையே
முயன்று முயன்று
மனம் தோற்கிறது சமரசங்கள்!

அழியாமலே
கருங்கல்சிற்பமாகியது
வாழ்வின் மீதான நம்பிக்கை!

கலையாத கனவாக
வண்ண வண்ண கோலத்தில்வந்து
என்னை மகிழ்விக்கும்எதிர்காலம்!

2 comments:

  1. வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
    நிலாமதி அக்கா

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா

    ReplyDelete