Tuesday, September 22, 2009

நட்பு



புன்னகைபூத்த வதனம்
பூவிதழ்போன்ற உள்ளம்
தெளிந்தநன் நீரோடையென
உன் அன்பு
எதையும் எதிர்பாராமலே
எல்லோருக்கும் தந்தாய்
உறவுக்கு அர்த்தம்சொல்லும்
என் இனிய உறவானாய்

ஊழிக்காலத்தில்
வீசிய சூறாவளியில்
உருக்குலைந்தது எம்கூடு
தூக்கி வீசப்பட்டநாளிலிருந்து
தேடுகிறேன்நான் உன்னை

தேடி நீயும் திரிவது
தெரிகிறது மனக்கண்ணில்
தேயாது நம்அன்பு
தேசமது மாறினாலும்
தேவதையே நீயும்
தெரிந்துகொள்!

1 comment:

  1. //ஊழிக்காலத்தில்
    வீசிய சூறாவளியில்
    உருக்குலைந்தது எம்கூடு
    தூக்கி வீசப்பட்டநாளிலிருந்து
    தேடுகிறேன்நான் உன்னை//


    ரசித்த வரிகள்....!

    தெரிந்த கொள்வாளா..................?

    ReplyDelete