Monday, October 12, 2009

நீ வருவாய் என!


இற்றைவரை தெரியவில்லை
எப்போது உன் வருகையென
குமுறி அடங்கும் விம்மல்களை
இதயச் சுவரது தாங்காது
வெளியில் வீசுகிறது
உஷ்ணமான பெருமூச்சுக்களாக
இதயத்துடன் பேசுகிறேன்
அருகில் நீ இருப்பதாக


பகிர்ந்துகொள்ளநீ வருவாய் என
பல நாளாய் என்னுள்
சேர்த்துவைத்த
சின்னச் சின்ன சந்தோசங்களும்
மனதை அரிக்கும் சோகங்களும்
எவரும் திறவாப் புத்தகமாய்
இறைந்து கிடக்கிறது
மனம் நிறைய!

1 comment:

  1. பகிர முடியாத சோகங்களையும்
    சிரிக்க வைக்கும் சந்தோசங்களிட்கும்
    செவிசாய்க்க பல காது காத்திருக்குது
    நீங்க சொல்லுவியளா ???

    ReplyDelete