தட்டி யாரிடமும்
தா என்று கேட்கமுடியாது
தந்ததை
எப்பவும் மறக்க முடியாது
கணக்கு வழக்கு
எனக்கு புரியலை
காரணம் சொல்லவும்
எனக்குத் தெரியலை
பெறும்போதெல்லாம்
உள்ளம் இனித்தது
கொடுக்கும் வழிதான்
தெரியாதிருந்தது
உதடு வேணும்னா
பொய்கள் சொல்லலாம்
உள்ளத்துக்கு மட்டும் தான்
சுகங்கள் தெரியும்
உலகுக்கு என்னை தெரியாது
உண்மையில் நான் ஓர்
கடன்காரி!!!!
அன்பு அளவில்லாதது கொடுத்தாலும் குறையாதது.........நல்ல கவிதை.
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துகளுக்கு !!!
ReplyDelete