1.பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்
2.பூக்களற்ற தலை
பொட்டில்லா நெற்றி
வர்ணமில்லா புடவை என
அத்தனையும் இல்லாத
அவளை அபகரிக்க
துடிக்கின்றது அரக்கர் கூட்டம்
3.முழுதாய் கலையாத தூக்கம்
அதட்டி எழுப்பும் அலாரம்
இயந்திரமாய் பல்துலக்கி
இரண்டு நிமிட குளியல் போட்டு
காலை கோப்பிக்கு கடிக்க
நேரமின்றி வேலைக்கு
செல்கையிலே வருகிறது
வீட்டு நினைவு ...
சிறுகவிதைகள் அருமை .............காலைக் கோப்பி குடிக்க ....( எழுத்துப்பிழை) நேரமின்றி ..........என் திருத்துங்கள் . கவிதைக்குபாராட்டுக்கள்.
ReplyDeletethanks acca.
ReplyDeletei come to say to take sumthing with coffee..but maybe its not well