உனதும் எனதுமான சந்திப்பின்
இறுதினாளாக இருக்க வேண்டுமென
இருவரும் ஒருமித்து வேண்டிய நாள்
உன்னால் நானும் என்னால் நீயும்
பகிர்ந்துகொண்ட இன்பங்களை மறந்து
பட்ட கஷ்டங்களை மட்டுமே
நினைவுபடுத்திய நாள்
மெல்லிய வெண்பனியில்
ஏறிட்டு முகத்தினை பார்க்காது
பாதச் சுவடுகளை பார்த்தபடி
பேசிக்கொண்ட நாள்
அறிமுகமான நாளிலிருந்து
அருகிலிருக்க விரும்பிய இதயம்
எப்போது விடைபெறலாம் என
ஏங்கிய நாள்
இதயங்கள் இடம்மாறி
எங்கள் காதல் முறிந்த
கடைசி சந்திப்பு நடந்த நாள்
சோகம் சுமையானது இறக்கி வையுங்கள்.
ReplyDeleteஉண்மைதான்...
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துகளிற்கு