வலிகள் சுமப்பதற்கே தான்
இதயம் எதையும் தாங்கவே தான்
இடிபுயல் போல பிரச்சினை வந்து
இருப்புக்கள் எல்லாம் இழந்ததன் பின்பும்
உறவுகள் என்ற சுயநலம் கொண்ட
மனிதர்கள் எல்லாம் உன்னை
ஒதுக்கிய பின்பும்
பணம் பொருள் பதவி எல்லாம்
பறிபோன பின்பும்
நம்பிக்கையோடு நீ காத்திரு
நாளை உனக்கான விடியல்
வரும் அதுவரை பொறுத்திரு
ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே தான்.
வலிகளை தாங்கி
ReplyDeleteஇதயத்தில் சுமைகளைத் சுமந்து
எல்லாவற்றையும் இழந்து
சுயநல உறவுகளால் ஒதுக்கப்பட்டு
நம்பிக்கையுடன் காத்திருந்தால் விடியல் கிடைக்குமா?
வாழ்க்கை வாழ்வதற்காகதான் மறுப்பதற்கில்லை
வாழ்வதற்கு வழியற்று, நாதியற்று, எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாக இருக்கும் போது
நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில்
எதை, யாரை நம்பி காத்திருக்க
விடியல் வருமென்று பொறுத்திருக்க,
வாழ்க்கை வாழ்வதற்கே,
எவ்வாறு வாழ அகதியாகவா? அடிமையாகவா? சுதந்திரமாகவா?
- குறும்புக்குண்டன் -
தமிழிஸில் உங்கள் பதிவுகளை இணைத்தால் உங்கள் திறமைகளை இன்னும் வெளிக்கொண்டு வரமுடியும்
ReplyDeleteஅதற்கான முகவரி
www.tamilish.com