நீண்ட இரவு
கொட்டும் பனித்துகள்
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
தேய்ந்துபோன நிலா
மெல்லிய குளிர்காற்று
சில்லிட்ட மெத்தையில்
தூங்க மறுக்கும் விழிகளுடன்
போராடியபடி நான்
நினைவுகளின் சுழற்சியில்
கடந்தகாலங்கள் களிப்பூட்டும்
ஏக்க பெருமூச்சுக்களாய் மட்டும்
எல்லாம் கனவோ என்கின்ற மாதிரி
கடந்து போகின்ற நிகழ்காலம்
எதிர்காலம் பற்றியஎவ்வித தீர்மானமும்
இன்னும் இல்லாத போதிலும்
கண்ணயர்ந்து போகின்றேன்
நாளை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன்
சுகமான நினைவகளின
ReplyDeleteநிறைவன வரிகளில்
கனவுகளை உலாவிட்டமை தனியழகு
.........
எனறாலும் கனவின் சுகங்களின்
சுமைகளுடன்
தலையணையும் சேர்ந்து
தனிமையை போக்கி தானும் நனைந்து கொள்வது
உங்கள் உணர்வுகளில் ஏக்கத்தின்
உச்சம்....!
அருமையாக உள்ளது..
ReplyDeleteஉங்கள் கருத்துக்கள் யாவற்றுக்கும் நன்றி.
ReplyDelete