ஆசைப்படுகின்றேன்......
உன் அருகில் இருப்பதற்கு..
ஆனால் முடியவில்லை!
ஆனால் முடியவில்லை!
உனக்கு அள்ளிக் கொடுப்பதற்கு
அகத்தில் ஒன்றும் இல்லை!
உன்னை கட்டி அணைப்பதற்கு!!
கைகள் எட்டவில்லை!
எல்லாம் இருந்தும்
என்னை வெறுக்கிறேன்
இயலாமையின் காரணத்தால்....
எனது இதயம் புண்ணாய் போகின்றது
உனது உணர்வலைகளை எண்ணி
பறந்து போகின்றன எனது சோதனைகள்
உனது மன வேதனைகளை பார்த்து
உனது மன வேதனைகளை பார்த்து
உறையாமல் ஓடுகின்றது எனது குருதி
உனது மன உறுதிகளை பார்த்து
ஆசைப்படுகின்றேன்... நான்
உன் பாதணிகளாக இருக்கவாவது..
உனது கனவுகளை நோக்கிய பயணத்தில்!!!!
ஆசைப்படுவது தப்பா?
நியாயமான் ஆசைகள் இருந்தால் நிறைவேற வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி
ReplyDeleteநியாயமான ஆசைகள்தான் அக்கா. இவை உறவுகளைப் பிரிந்து புலம் பெயர்ந்திருப்பவர்களின் ஏக்கங்கள்கூட. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள். உங்கள் வரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete