Sunday, February 07, 2010
அச்சச்சோ !!
தை 30 . தைப்பூசம். அம்மா, அத்தை இருவரும் அது நல்ல நாள் என்று உறுதியாக சொன்னதில் என் பையனிற்கு சோறு தீர்த்தலாம் என முடிவானது.
காலையில் இருந்தே ஒரே பரபரப்பு. எல்லா வேலைகளும் முடித்து நாங்களும் கோவில் வந்து சேர அண்ணாவும் வந்துவிட்டார். ஆசைக்கு ஐந்தாறு போட்டோ எடுத்து அந்த காரியம் சிறப்பாகவே முடிந்ததில் பரம திருப்தி.
பிள்ளைகள் கூட வருவது கஷ்டம் என்று அடிக்கடி கோவிலுக்கு வருவதுமில்லை. வந்தனான் அர்ச்சனையும் செய்து கொண்டு போவோம் என நினைத்து மகனை இவரிடம் வைத்திருக்க கொடுத்துவிட்டு லைனில் நின்றேன். எனக்கு முன்னால் 3 பேர் தான். பின்னால எப்டியும் பத்து பேருக்கு குறையாது. கடவுளே பிள்ளைக்கு பசிவர முன்னம் போகணும்.
என் முன்னால் நின்றவர்களது அர்ச்சனையினை முடித்து ஐயர் என்னிடம் வந்தார். அவருக்கும் ஒரு 30 க்கும் 40 க்கும் இடையில் தான் வயசு. நல்ல களையான முகம்.
எங்கட குடும்பத்துக்கும் அக்கா குடும்பத்துக்கும் செய்யவேணும்.
ஐயர் என்னிடம் வந்து பெயர் நட்சத்திரம் சொல்லுங்கோ என்றார்.
நானும் சுகிர் குடும்பம் நாமதேசிய !!!!
வசந்தன் குடும்பம் நாமதேசிய !!!!!!!!
என்றேன்.
என் பக்கத்தில் நின்றவர்கள் வாய்பொத்தி சிரிக்க ஐயர் சிரிக்க வழியின்றி தவிக்க, என் தவறு எனக்கு புரிந்தது. பம்பலாக கதைப்பது பழக்கதோசத்தில் வந்துவிட்ட சங்கடத்தில் தலையை சொறிந்தபடி நான் நெளிந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல காமெடி. இப்டி அடிக்கடி எல்லாருக்கு நடக்கும், கவல படாதீங்க
ReplyDeleteபழக்கதோஷம் அவஸ்தையை கொடுக்குது என்ன பண்ணலாம் ???
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துக்கு